ஜிம்பாப்வே தடை நீக்கம் | அக்டோபர் 14, 2019

தினமலர்  தினமலர்
ஜிம்பாப்வே தடை நீக்கம் | அக்டோபர் 14, 2019

துபாய்: ஜிம்பாப்வே, நேபாள அணிகள் மீது விதிக்கப்பட்ட தடையை ஐ.சி.சி., நீக்கியது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகரித்தது. கிரிக்கெட் நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சுமத்தி, கடந்த ஜூன் 22ம் தேதி ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்தது. கிரிக்கெட் போர்டை நிர்வகிக்க இடைக்கால கமிட்டியை அரசு அமைத்தது. இதுகுறித்து விவாதித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), விதிகளை மீறி செயல்பட்ட ஜிம்பாப்வே அணிக்கு கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது.

இதே காரணத்திற்காக 2016ல் நேபாள அணிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை நீக்கப்பட்டது. இதுகுறித்து ஐ.சி.சி., தலைவர் சஷாங்க் மனோகர் வெளியிட்ட அறிக்கையில்,‘ஐ.சி.சி., விதிகளை நிபந்தனை இன்றி ஏற்றுக் கொண்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு மீண்டும் நிரந்தர உறுப்பினராக ஏற்கப்பட்டது. இதேபோல நேபாள கிரிக்கெட் சங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து, இதன் மீதான தடையும் விலக்கிக் கொள்ளப்படும்,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை