பஞ்சாப் அணியில் நீடிப்பாரா அஷ்வின் | அக்டோபர் 14, 2019

தினமலர்  தினமலர்
பஞ்சாப் அணியில் நீடிப்பாரா அஷ்வின் | அக்டோபர் 14, 2019

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் அஷ்வினை கழற்றி விடும் எண்ணத்தை பஞ்சாப் மாற்றியுள்ளது. 

 இந்தியாவின் ‘நம்பர்–1’ டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 32. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக (2008–15) கலக்கினார். பின் புனேக்கு (2016–17) சென்ற இவர், பஞ்சாப் அணி கேப்டனாக உள்ளார்.

2018 (7வது), 2019(6வது) என கடந்த இரு சீசனில் 28 போட்டியில் 25 விக்கெட் சாய்த்த இவர், அணியை ‘பிளே ஆப்’ சுற்றுக்கு கொண்டு செல்லவில்லை. சர்வதேச அரங்கில் கடந்த 9 மாதங்களாக புறக்கணிக்கப்பட்ட அஷ்வினை, பஞ்சாப் அணி கழற்றி விடும், இவர் டில்லி அணிக்கு செல்வார் என செய்திகள் வெளியாகின. 

தற்போது தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்ற அஷ்வின் முதல் இரு டெஸ்டில் 14 விக்கெட் சாய்த்து, ‘நம்பர்–1’ பவுலராக உள்ளார். இதனால் அஷ்வினை தக்கவைக்க பஞ்சாப் அணி முடிவு செய்துள்ளது.

உரிமையாளர் நெஸ் வாடியா கூறுகையில்,‘‘அஷ்வின் குறித்து டில்லி அணியுடன் பேசியது உண்மை தான். ஆனால் இறுதி முடிவெடுக்கவில்லை. அவர் விளையாடும் விதத்தை பார்த்து பஞ்சாப் அணி மனதை மாற்றிக் கொண்டது. அஷ்வின் எங்கள் அணியின் ஒரு அங்கம் என்பதை புரிந்து கொண்டது,’’ என்றார்.

மூலக்கதை