நன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்

தினமலர்  தினமலர்
நன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்

மும்பை: நாட்டில் அதிக நன்கொடை அளித்தோர் பட்டியலில் கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார்.
மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள் பெரும் பணக்காரர்கள் தங்களுடைய வருமானத்தில் இருந்து சமூக நலத் திட்டங்களுக்கு நன்கொடைகள் அளிக்கின்றனர்.

கம்பெனி சட்டத்தின்படி ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய லாபத்தில் இரண்டு சதவீதத்தை சமூக நலப் பணிகளுக்கு செலவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதில் அதிக நன்கொடை அளித்தோர் குறித்து தனியார் அமைப்பு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி 2018ல் அதிக நன்கொடை அளித்தோரில் எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் 826 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார்.


'விப்ரோ' நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி 453 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். நாட்டின் பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள 'ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானி 402 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மூலக்கதை