சமூக வலைதள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய மனு தள்ளுபடி

தினகரன்  தினகரன்
சமூக வலைதள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: பாஜ.வைச் சேர்ந்த வக்கீல் அஸ்வனி குமார் உபத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,  ‘‘போலி மற்றும் பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.  இவற்றை தடுக்கும் வகையில் சமூக வலைதள கணக்குகளான பேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்  நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘‘இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற மனுக்களை ஊக்குவிக்க முடியாது. மனுதாரர் விரும்பினால் உயர்  நீதிமன்றத்தை அணுகலாம்” என்று உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து மனுதாரர் அஸ்வனி குமார் சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் இணைக்க கோரும் மனுவை திரும்ப பெற்றார்.

மூலக்கதை