பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள்

தினமலர்  தினமலர்
பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛பிகில்' படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், ஹாலிவுட் நடிகர் பில் டியூக் ஆகியோர் பிகில் டிரைலரை பாராட்டி உள்ளனர்.

சக் தே இந்தியா படம் போலவே பிகில் படமும் வெற்றி பெறட்டும். நண்பர்கள் அட்லீ, விஜய், ரஹ்மானிற்கு வாழ்த்துக்கள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பில் டியூக், ‛‛பிகில் டிரைலர் சிறப்பாக இருக்கிறது. அமெரிக்காவில் பிகில் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதா? என கூறியிருக்கிறார்.

இதையடுத்து அமெரிக்காவில் கண்டிப்பாக சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. அதுகுறித்த தகவலை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என அட்லீ அவருக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

மூலக்கதை