வெள்ள தடுப்பு தொழில்நுட்பம் இந்திய குழுவுக்கு ஐபிஎம் விருது

தினகரன்  தினகரன்
வெள்ள தடுப்பு தொழில்நுட்பம் இந்திய குழுவுக்கு ஐபிஎம் விருது

நியூயார்க்: வெள்ளத் தடுப்புக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக இந்திய மென்பொருள் நிபுணர்கள் குழுவுக்கு ஐபிஎம் விருது கிடைத்துள்ளது. ஐநா மனித உரிமை அமைப்புடன் இணைந்து ஐபிஎம் மென்பொருள் நிறுவனம் ஆண்டுதோறும் ‘கால் பார் கோட்’ என்ற உலகளாவிய சவால்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வை காண்பது குறித்த போட்டியை நடத்தி விருது வழங்கி வருகிறது. இதில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் புனேயைச் சேர்ந்த சித்தம்மா திகாடி, கணேஷ் கதம், சங்கீதா நாயர், ஷிரேயாஸ் குல்கர்னி ஆகியோர் கொண்ட குழு முதல் பரிசான ரூ.3.5 லட்சத்தை வென்றது. இக்குழுவினர் பூர்வ சுசக் என்ற வெள்ளத் தடுப்பு குறித்த புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் நீர்தேக்கங்கள், அணைகள், ஆறுகள் ஆகியவற்றின் தகவல்களை இணைத்து, அதன் மூலம் வெள்ள அபாயம் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்க முடியும். இத்தகவல்களை அரசு அமைப்புகள், பேரிடர் மேலாண்மை குழுவினர் பெற்று வெள்ளத்தால் பல உயிர்கள் பலியாவதையும், பொது சொத்துகள் சேதமடைவதையும் தடுக்க முடியும் என விருது வென்ற குழுவினர் கூறி உள்ளனர். உலகளாவிய பிரிவில் ஸ்பெயினைச் சேர்ந்த புரோமிடியோ குழுவுக்கு முதல் பரிசான ரூ.1.5 கோடி வழங்கப்பட்டது. இக்குழு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பயங்கர தீ விபத்துகளை அணைக்கும் முயற்சியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களை பாதுகாப்பது மற்றும் அவர்களின் உடல்நலனை கண்காணிப்பதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர்.

மூலக்கதை