இந்தியர் அபிஜித் உட்பட மூவருக்கு நோபல் பரிசு

தினமலர்  தினமலர்
இந்தியர் அபிஜித் உட்பட மூவருக்கு நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம் : அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, 58, உட்பட, மூன்று பேருக்கு, இந்த ஆண்டு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளுக்கான, நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவியும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான எஸ்தர் டப்லோ. அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் மைக்கேல் கிரிமர் ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்தப் பரிசு, தங்கப் பதக்கம், 6.52 கோடி ரூபாய் ரொக்கமும் கொண்டது. உலக அளவில், வறுமை ஒழிப்பிற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததால், இந்த தொடர்ச்சி 2ம் பக்கம்இந்தியர் அபிஜித்...முதல் பக்கத் தொடர்ச்சிமூவருக்கும், நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக, நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற, இரண்டாவது பெண் என்ற பெருமையை எஸ்தர் டப்லோ பெற்றுள்ளார்.பல விருதுகள் பெற்றவர்அபிஜித் பானர்ஜி, 1961 பிப்., 21ல், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் பிறந்தார். இவரது பெற்றோர், கல்லுாரியில் பொருளாதார பேராசிரியர்களாக பணியாற்றினர். இவர் எம்.ஏ., பொருளாதாரம் முடித்தார். பின், 1998ல், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் பிஎச்.டி., முடித்தார். ஹார்வர்டு, பிரின்ஸ்டன் பல்கலையில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றிய இவர், தற்போது அமெரிக்காவின் எம்.ஐ.டி., கல்லுாரியில், பேராசிரியராக பணியாற்றுகிறார்.

'அமெரிக்கன் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ், ஜெரால்டு லியோப், இன்போசிஸ்' ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். பொருளாதாரம் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் முதலில், அருந்ததி என்பவரை திருமணம் செய்தார். பின் விவாகரத்து செய்தார். இவரிடம், பிஎச்.டி., ஆய்வுக்கு ஆலோசனை பெற்ற, எம்.ஐ.டி., பேராசிரியை எஸ்தர் டப்லோவை, 2015ல் திருமணம் செய்தார்.

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்1) ரபீந்திரநாத் தாகூர், இலக்கியம், 19132) சி.வி.ராமன், இயற்பியல், 19303) அன்னை தெரசா, அமைதி, 19794) அமர்த்திய சென், பொருளாதாரம், 19985) கைலாஷ் சத்யார்த்தி, அமைதி, 2014நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்1) ஹர் கோபிந்த் குரானா, மருத்துவம், 1968, அமெரிக்கா2) சுப்ரமணியன் சந்திரசேகர், இயற்பியல், 1983, அமெரிக்கா3) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், வேதியியல், 2009, பிரிட்டன், அமெரிக்கா4) அபிஜித் பானர்ஜி, பொருளாதாரம், 2019, அமெரிக்கா

மூலக்கதை