'ஹகிபிஸ்' சூறாவளி: பலி 56 ஆக உயர்வு

தினமலர்  தினமலர்
ஹகிபிஸ் சூறாவளி: பலி 56 ஆக உயர்வு

டோக்கியோ : ஜப்பானில், 'ஹகிபிஸ்' சூறாவளிக்கு பலியானோரின் எண்ணிக்கை, 56 ஆக அதிகரித்துள்ளது. கிழக்காசிய நாடான, ஜப்பானின், ஹின்சு தீவு பகுதியை, ஹகிபிஸ் எனப்படும் சூறாவளி காற்று, சமீபத்தில் தாக்கியது.

மணிக்கு, 216 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளியால், ஹின்சு தீவு மட்டுமின்றி, ஜப்பானின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளும் கடும் பாதிப்பை சந்திந்துள்ளன. வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களின் கூரைகள் காற்றில் பறந்து விட்டன. சூறாவளியின் போது, பெய்த பலத்த மழையால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, முக்கிய நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது; மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்நிலையில், சூறாவளிக்கு பலியானோரின் எண்ணிக்கை, 56 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 15 பேரை காணவில்லை என, தகவல்கள் கூறுகின்றன. ஜப்பானில், 20க்கும் அதிகமான ஆறுகளில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மீட்பு பணிகளை மேற்கொள்வது, மிகவும் சவாலானதாக உள்ளது என, மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். தலைநகர் டோக்கியோவில், பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

மூலக்கதை