தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்

தினமலர்  தினமலர்
தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்

என்ஜிகே படத்தை அடுத்து ‛இந்தியன் 2' மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். இதுதவிர தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடிக்கிறார். தோல்வி படங்களில் இருந்து தான் பாடம் கற்றுக் கொண்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நான் சினிமாவுக்கு வந்த நேரத்தில் கிடைக்கிற படங்களில் எல்லாம் நடித்தேன். இதனால் பல தோல்விகளையும் சந்தித்தேன். ஆனால் இப்போது தெளிவு பெற்று விட்டேன். நல்ல கதைகள், கதாபாத்திரங்களாக இருந்தால் மட்டுமே படங்களை ஓகே செய்கிறேன். இதனால் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

இதைப்பார்த்து படங்களின் தோல்வி காரணமாக எனக்கு படவாய்ப்புகள் இல்லை என்று செய்தி வெளியிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ள ரகுல் பிரீத் சிங், ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மூலக்கதை