பாக்.,கை உலுக்கிய நிலநடுக்கம்

தினமலர்  தினமலர்
பாக்.,கை உலுக்கிய நிலநடுக்கம்

இஸ்லாமாபாத் : பாக்., நாட்டில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று (அக்.,14) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா பகுதியையும் தாக்கியது. இந்த நிலநடுக்கத்தால் பெஷாவர், மலகண்ட், மர்தான், சர்சத்தா, அட்டாக் மற்றும் ஹசாரா ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மூலக்கதை