சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா

தினமலர்  தினமலர்
சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு 96 ஷூட்டிங்கை முடித்த சமந்தா

2018ம் ஆண்டின் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் '96'. அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதல் முறையாக இணைந்து நடித்த அந்தப் படம் நல்லதொரு வெற்றியைப் பெற்றது.

அப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பட வெளியீட்டிற்கு முன்னதாகவே பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வாங்கினார். தெலுங்கில் சர்வானந்த், சமந்தா நடிக்க படம் ரீமேக்காகி வருகிறது. தற்போது சமந்தா அவருடைய படப்பிடிப்பை முடித்துள்ளார்.

“நிறைவு, நான் நேற்று இருந்ததைவிட மிகவும் சவாலான கதாபாத்திரமாகவும், படமாகவும் இருந்த மற்றொரு சிறப்புத் திரைப்படம். இயக்குனர் பிரேம், சர்வானந்த் ஆகியோர் எனது கனவு டீமாக இருந்ததற்கு நன்றி. ஜானுவிற்கு எனது சிறந்த வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறேன்” என பகிர்ந்துள்ளார் சமந்தா.

மூலக்கதை