கீச்சுச் சாளரம் தொகுப்பு: நீச்சல்காரன்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கீச்சுச் சாளரம் தொகுப்பு: நீச்சல்காரன்

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனிடம்   அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள் அப்போது தெரியும் அவர்களின் உண்மை முகம்

@gowthamiTta 

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாத ஒரே செயல் இப்போதைக்கு மொபைல் சார்ஜிங் மட்டும் தான் 

@Tamilsel_Twit

எழுந்திரிக்கிறதுக்கு  “மட்டும்” 

அலாரம்  வச்சு பழகிட்டோம்...

தூங்குறதுக்கு  அலாரம் வச்சு தூங்குனா..

எழுந்திரிக்க  அலாரமே தேவைப்படாது...

 @Raajavijeyan

நாளை உங்கள் பிணத்தின் மீது நெளியும் புழுக்களைக் கேட்டுப் பாருங்கள்... நீங்கள் என்ன ஜாதி என்று சொல்லும். 

@priyaGurunathan.

குழந்தைகளுக்கு மாறுவேடம் போட்டால் கிருஷ்ண ஜெயந்தி,

கடவுளுக்கே மாறுவேடம் போட்டால் விநாயகர் சதுர்த்தி

@mohanramko

சிக்னல் சரியா கிடைக்காத இடத்துல "இப்பா கேட்குதா?"ங்கற வார்த்தை மட்டும் துல்லியமா கேட்குறதெல்லாம் என்ன டிசைனோ..!!!

@Ramesh46025635

மூலக்கதை