துருக்கி படை தாக்குதல்: 800 பயங்கரவாதிகள் ‛எஸ்கேப்'

தினமலர்  தினமலர்
துருக்கி படை தாக்குதல்: 800 பயங்கரவாதிகள் ‛எஸ்கேப்

டமாஸ்கஸ் : சிரியாவில் துருக்கி படைகள் நடத்தும் தாக்குதலைத் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 800க்கும் அதிகமான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.


சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்துப் படையினர் மீது துருக்கி போர் தொடுத்துள்ளது. குர்துப் படையினரால் பிடித்து ரக்கா நகருக்கு அருகே உள்ள அய்ன் இஸ்ஸா என்ற இடத்தில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த முகாமில் இருந்த ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என 800க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பிச் சென்று விட்டதாக குர்திஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தப்பியோடிய பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 950 வரை இருக்கும் எனவும், தப்பியோடியவர்களில் ஐஎஸ் ஆதரவாளர்களும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை