அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் சங்கம் நடத்திய ஸ்டெம் (STEM )

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் சங்கம் நடத்திய ஸ்டெம் (STEM )

மகேந்திரன் சுந்தர்ராஜ்

பென்சில்வேனியா, டெலவர் கிளை ஒருங்கிணைப்பாளர்

அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் சங்கம் 

அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் சங்கம்  ஒரு லாப நோக்கற்ற,  தன்னார்வல அமைப்பு. அமெரிக்கத் தமிழ் மக்களிடையே தொழில் நடத்தும் திறனை மேம்படுத்தும் நோக்கில் 2016 -ல் தொழில் முனைவோர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகிகள், முதலீட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் சார்பில் பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.  

இந்த அமைப்பின் பென்சில்வேனியா டெலவர் பெருநிலக் கிளையின் சார்பில் அண்மையில் 8-16 வயது சிறார்களுக்கான STEM (Science, Technology, Engineering and Math அதாவது அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் 50 குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் நோக்கம் நம் குழந்தைகளுக்குத் தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்துவதும், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களை அறிமுகப்படுத்துவதுமாகும். 

பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் பைத்தான் (Python) கணினி மொழிப் பயிற்சிப் பட்டறையும், எட்டிலிருந்து பன்னிரண்டு  வரையிலான  குழந்தைகளுக்கு  Scratch programming  மற்றும் எந்திரனியல் (Robotics) பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்பட்டன. இதில் டெலவர், பென்சில்வேனியா மற்றும் நியூஜெர்சியில் இருக்கும் குழந்தைகள் பயன் பெற்றனர். இது  போன்ற நிகழ்ச்சிகளை இன்னும் பல இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளோம்.

மூலக்கதை