தீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்

தினகரன்  தினகரன்
தீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்

சேலம்: சேலம் வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்திலேயே சேலத்தில்தான் வெள்ளிப்பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு  25 நாட்களுக்கு முன்பே வட மாநில ெவள்ளி வியாபாரிகள், தமிழக வெள்ளி வியாபாரிகள் ஆர்டர் கொடுப்பார்கள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு பிறகு, அடுத்தடுத்து முகூர்த்தம் வருவதால், வெள்ளிப்பொருட்களின் தேவை  அதிகரித்துள்ளது. வெள்ளிப்பொருட்களில் கா ல்கொலுசுக்கு தான் ஆர்டர் அதிகளவில் வந்துள்ளது. இதையொட்டி வெள்ளிப்பட்டறைகள் வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளோம். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 40 ஆயிரத்திற்கு விற்றது. விலை படிப்படியாக அதிகரித்து, நேற்று நிலவரப்படி கிலோ 45 ஆயிரத்து 200க்கு விற்றது. தீபாவளியை முன்னிட்டு சுமார் 50 டன் அளவுக்கு வெள்ளிப்பொருட்கள் ஆர்டர்  வந்துள்ளது. அடிக்கடி ஏறி, இறங்கும் விலையில் வெள்ளி வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரே மாதிரியான விலை இருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் என்றனர்.

மூலக்கதை