பார்படாஸ் அணி சாம்பியன் | அக்டோபர் 13, 2019

தினமலர்  தினமலர்
பார்படாஸ் அணி சாம்பியன் | அக்டோபர் 13, 2019

டிரினிடாட்: கரீபிய பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் பார்படாஸ் அணி கோப்பை வென்றது. பைனலில் கயானா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

விண்டீஸ் மண்ணில் கரீபிய பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ தொடரின் 7வது சீசன் நடந்தது. இதன் பைனலில் பார்படாஸ் டிரிடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. 

கார்டர் விளாசல்

முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் (39), ஹேல்ஸ் (28) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஹோப் (8), கேப்டன் ஹோல்டர் (1) ஏமாற்றினர். கார்டர் 26 பந்தில் அரை சதம் விளாச, பார்படாஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. கார்டர் (50), ஆஷ்லே நர்ஸ் (19) அவுட்டாகாமல் இருந்தனர். 

மாலிக் சொதப்பல்

பின், களமிறங்கிய கயானா அணிக்கு ரெய்பர் ‘வேகத்தில்’ தொல்லை தந்தார். இவரது பந்துவீச்சில் ஹேம்ராஜ் (9), ஹெட்மயர் (9) அவுட்டாகினர். கேப்டன் சோயப் மாலிக் (4) ஒற்றை இலக்கில் திரும்பினார். அதிகபட்சமாக பிரண்டன் கிங் 43 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் திரும்ப, கயானா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. பார்படாஸ் சார்பில் அதிகபட்சமாக ரெய்பர் 4 விக்கெட் வீழ்த்தினார். 

இதன் மூலம், பார்படாஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை (2014, 19) வென்றது. 

 

மூலக்கதை