தேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
தேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி

கொழும்பு : இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இந்த நிலையில், தென் பகுதியில் உள்ள, எல்பிட்டியாவில் உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடக்க வேண்டிய தேர்தல், வேட்பாளர்கள் வழக்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

சமீபத்தில் நடந்த இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின், எஸ்.எல்.பி.பி., எனப்படும், இலங்கை பொதுஜன பேரமுனா கட்சி, 57 சதவீத ஓட்டு பெற்று வென்றது.இது குறித்து ராஜபக்சே கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, அதிபர் தேர்தலுக்கான முன்னோட்டம். அதிபர் தேர்தலில் எங்களுடைய கட்சி சார்பில் போட்டியிடும், என் சகோதரர், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை