கேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்

தினமலர்  தினமலர்
கேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்

வாடிகன் சிட்டி : ஐரோப்பிய நாடான வாட்டிகன் சிட்டியில் நடந்த நிகழ்ச்சியில், கேரளாவைச் சேர்ந்த, கன்னியாஸ்திரி மரியன் தெரேசியா உட்பட ஐந்து பேருக்கு, போப் பிரான்சிஸ், புனிதர் பட்டத்தை வழங்கி கவரவித்தார்.

கேரளாவின் புதேன்சிராவில், 1876ல் பிறந்தவர், மரியம் தெரேசியா. இவர், 1914ல் திருக்குடும்ப அருள் சகோதரிகள் சபை என்ற அமைப்பைத் துவக்கினார். கடந்த, 1926ல், தன், 50வது வயதில் மரணமடைந்தார்.இவருக்கு, புனிதர் பட்டம் வழங்கப் படும் என, கிறிஸ்துவர்களின் தலைவரான, போப் பிரான்சிஸ் அறிவித்துஇருந்தார். வாடிகனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மரியம் தெரேசியாவை புனிதராக அறிவித்தார் போப். இவரைத் தவிர, மேலும் நான்கு பேரையும் புனிதராக அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி. முரளீ தரன் தலைமையிலான இந்தியக் குழு பங்கேற்றது. தெரேசியா புனிதராக அறிவிக்கப்பட்டதன் மூலம், கேரளாவில் உள்ள, சைரோ - மலபார் தேவாலயத்தைச் சேர்ந்த, நான்கு பேர் புனிதர் களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த, 2008ல் சகோதரி அல்போன்சா முதல் முதலில் புனிதராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, பாதிரியார் குரியகோஸ் எலியாஸ் சவாரா, சகோதரி யூப்ராசியா ஆகியோர் புனிதர்களாக, 2014ல் அறிவிக்கப்பட்டனர்.

மூலக்கதை