இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவிட்டது தப்புதான்... புலம்பும் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவிட்டது தப்புதான்... புலம்பும் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்

புனே:  புனேவில் கடந்த 10ம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, முதல் 5 விக்கெட்டுகளை 53 ரன்களுக்கே இழந்துவிட்டது.

பாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான புனே ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்க வீரர்களின் பாஸ்ட் மற்றும் ஸ்பின் பந்துகள் எடுபடவில்லை. ஆனால், இந்திய அணியை பொருத்தவரை முதல் 5 விக்கெட்டுகளை பாஸ்ட் பவுலர்கள் வீழ்த்த, அடுத்த 3 விக்கெட்டுகளை ஸ்பின் பவுலர்கள் தான் வீழ்த்தினர்.

உலகின் டாப் பவுலர்களில் ஒருவரான ரபாடா, அனுபவம் வாய்ந்த பிளாண்டர் ஆகியோரின் மிரட்டலான வேகத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய சிரமமே இல்லாமல் சிறப்பாக ஆடினர். ஆனால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறினர்.

பாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக ஆடுகளம், நல்ல பாஸ்ட் பவுலர்களை பெற்றிருந்தும் கூட, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாததற்கு தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் எனோச் நிக்வி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிக்வி கூறுைகயில், ‘‘இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தவிட்டதற்கு நாங்கள் எங்களைத்தான் குறைசொல்லிக் கொள்ள வேண்டும்.

பாஸ்ட் பவுலிங்கிற்கு ஏற்ற ஆடுகளமாக இருந்தும்கூட, எங்களால் சிறப்பாக செயல்படமுடியவில்லை. ஸ்டம்புக்கு நேராக அதிகமாக வீசாமல், சற்று வைடாக வீசிவிட்டனர்.

இந்திய பேட்ஸ்மேன்களை ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆட விட்டுவிட்டோம்’’ என்றார். இந்நிலையில், இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா 326 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்க, இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

.

மூலக்கதை