முழுநேர மாரத்தான் ஓட்டத்தில் 42.2 கி.மீ 1 மணி 59 நிமிடத்திலா...? கென்ய வீரர் எலியட் புது சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
முழுநேர மாரத்தான் ஓட்டத்தில் 42.2 கி.மீ 1 மணி 59 நிமிடத்திலா...? கென்ய வீரர் எலியட் புது சாதனை

வியன்னா:  ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில், 42. 2 கி. மீ தூர முழுநேர மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தத் தொலைவை ஒரு மணிநேரம் 59 நிமிடங்கள் 40 வினாடிகளில், கென்ய வீரர் எலியட் கிப்கோஜ் (34) கடந்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இது அதிகவேக மாரத்தான் சாதனை என்றாலும், உலக சாதனையில் எடுத்துக்கொள்ளப்படாது. காரணம், இப்போட்டி அதிகாரப்பூர்வமானதல்ல.

அதிகாரப்பூர்வ மாராத்தான் போட்டிகளில் சாலைகளிலிருக்கும் குடிநீர் மற்றும் உற்சாக பானங்களை வீரர்களே எடுத்துக்குடிக்க வேண்டும் என்பது தான் விதிமுறை. ஆனால், வழியெங்கிலும் கிப்சோகேவுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.



கிப்சோகேவுக்குத் துணையாக 42 வீரர்கள் உடன் காரிலும்,  பைக்கிலும் வந்தார்கள். 1500 மீட்டர் ஒலிம்பிக் சாம்பியன் மாத்யூ  சென்ட்ரோவிட்ஸ், ஒலிம்பிக்கில் 5 ஆயிரம் மீட்டரில் வெள்ளி வென்றவரான பால்  செலிமோ உள்ளிட்ட பலர் துணையாகச் சென்றனர்.

இது அவரது ஓட்டத்தின் வேகத்தை கூட்டியது. ஒரு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க கிப்சோகே சராசரியாக 2. 50 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.

21 கிலோமீட்டர் தொலைவை 59. 35 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இருந்தும், உலக சாதனையில் இடம்பெறவில்லை.

இதற்கு முன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முழு மாரத்தான் தொலைவை 2 மணி நேரத்துக்குள் முடிக்க கப்சோகே முயன்று தோல்வி அடைந்தார்.

.

மூலக்கதை