ரஜினிகாந்த் இமயமலை பயணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஜினிகாந்த் இமயமலை பயணம்

சென்னை; ரஜினிகாந்த் இன்று காலை இமயமலை புறப்பட்டு சென்றார். அங்கு 10 நாட்கள் தங்கி தியானத்தில் ஈடுபடுகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலை செல்வது வழக்கம். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துக்கொடுத்தார்.

இதையடுத்து அவர் இமயமலை செல்ல முடிவு செய்தார். சென்னையிலிருந்து இன்று காலை 6. 40 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட ரஜினிகாந்த் இமயமலை அடிவாரமான உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்கிறார்.

பிறகு அங்கிருந்த அடுத்தடுத்த இடங்களுக்கு காரில் செல்வார் என்று தெரிகிறது.

கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கு அவர் செல்கிறார்.

இமயமலையில் பாபாஜி குகைக்கு சென்று தியானத்தில் ஈடுபட உள்ளார். சுமார் 10 நாட்கள் இமயமலையில் தங்கியிருந்துவிட்டு பிறகு அவர் சென்னை திரும்பி தர்பார் படத்தின் டப்பிங் பணியில் ஈடுபடுகிறார்.

தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் 168வது படத்தில் நடிக்க உள்ளார்.

.

மூலக்கதை