பள்ளிப்பட்டில் தபால் சேமிப்பு வங்கி தினம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பள்ளிப்பட்டில் தபால் சேமிப்பு வங்கி தினம்

பள்ளிப்பட்டு: தபால் வார விழாவை முன்னிட்டு, பள்ளிப்பட்டில் நேற்று நடைபெற்ற தபால் சேமிப்பு வங்கி தின நிகழ்ச்சியில் நகரி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். இந்தியா முழுவதும் தபால் துறையின் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 9 முதல் 15-ம் தேதி வரை தபால் வார விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு கடந்த 9-ம் தேதி தபால் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று தபால் சேமிப்பு வங்கி தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பள்ளிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தபால் சேமிப்பு வங்கி தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ஆர். கே. ரோஜா பங்கேற்றார்.

தபால் துறையின் புதிய சேமிப்பு வங்கி கணக்கு துவங்கியவர்களுக்கு பாஸ்புத்தகம் வழங்கினார். பின்னர், தபால்துறையின் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் கோட்ட தபால் கண்காணிப்பாளர் கே. சிவாஜிகணேஷ் தலைமை தாங்கினார்.

திருத்தணி உட்கோட்ட தபால் ஆய்வாளர் எஸ். கௌசிக் வரவேற்றார்.

தபால் மேலாளர் மல்லிகார் ஜுனா, பள்ளிப்பட்டு தபால்நிலைய அலுவலர் நிர்மலா, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா உட்பட ஏராளமான மக்களும் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை