பி.சி.சி.ஐ., கூட்டத்தில் பங்கேற்க தடை | அக்டோபர் 10, 2019

தினமலர்  தினமலர்
பி.சி.சி.ஐ., கூட்டத்தில் பங்கேற்க தடை | அக்டோபர் 10, 2019

புதுடில்லி: பி.சி.சி.ஐ., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மணிப்பூர், ரயில்வேஸ் என மொத்தம் எட்டு மாநில சங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் 23ல் மும்பையில் நடக்கவுள்ளது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, ஹரியானா, மஹாராஷ்டிரா என மூன்று மாநில சங்கங்கள் பங்கேற்க, பி.சி.சி.ஐ., நிர்வாகக்குழு (சி.ஓ.ஏ.,) தடை விதித்திருந்தது. பி.சி.சி.ஐ.,யின் புதிய விதிமுறைப்படி இந்த மாநில சங்கங்களின் தேர்தல் நடக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, மணிப்பூர், உ.பி., ரயில்வேஸ், சர்வீசஸ் உள்ளிட்ட சங்கங்களையும் கூட்டத்தில் கலந்து கொள்ள தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தமுள்ள 38 சங்கங்களில் எட்டு சங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக, சில சங்கங்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனத்தெரிகிறது.

மூலக்கதை