மும்பையை வீழ்த்தியது கர்நாடகா | அக்டோபர் 10, 2019

தினமலர்  தினமலர்
மும்பையை வீழ்த்தியது கர்நாடகா | அக்டோபர் 10, 2019

பெங்களூரு: மும்பை அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் அசத்திய கர்நாடகா அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, பெங்களூருவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் கர்நாடகா, மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

முதலில் ‘பேட்டிங்’ செய்த கர்நாடகா அணிக்கு லோகேஷ் ராகுல் (58), தேவ்தத் பாடிக்கல் (79) நல்ல துவக்கம் தந்தனர். கேப்டன் மணிஷ் பாண்டே (62), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.

கர்நாடகா அணி 7 விக்கெட்டுக்கு 312 ரன்கள் குவித்தது. கிருஷ்ணப்பா கவுதம் (22), ஸ்ரேயாஸ் கோபால் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (22), ஆதித்யா தாரே (32), சித்தேஷ் லத் (34), சூர்யகுமார் யாதவ் (26) ஆறுதல் தந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (11) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஷிவம் துபே (118) சதம் கடந்து நம்பிக்கை அளித்தார்.

மற்றவர்கள் ஏமாற்ற மும்பை அணி 48.1 ஓவரில், 303 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது.

மூலக்கதை