இரண்டு எழுத்தாளர்களுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

தினகரன்  தினகரன்
இரண்டு எழுத்தாளர்களுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.. உலகின் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசுக்கான, வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களில்  மருத்துவம், இயற்பியல், வேதியலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு இந்தாண்டுக்கு  ஒத்திபோடப்பட்டது. தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த பலர் ‘மீ டூ’ பாலியில் புகாரில் சிக்கியதால் ஸ்வீடன் அகாடமி குழுவில் இடம் பெற்றிருந்த நிரந்தர செயலாளர் சாரா டேனியஸ் உட்பட 7 பேர் பதவியை ராஜினாமா செய்தனர்.. இதையடுத்து புதிய உறுப்பினர்கள் மூலம், தேர்வுக்குழு மாற்றியமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் 2018ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த ‘ஓல்கா டோகார்சுக்’ என்பவரை தேர்வு செய்துள்ளனர். இவரது  கவிதை, கதைகள், நாவல்கள் சிறந்த கற்பனை வளத்துடன் கூடிய கலைகளஞ்சியமாக உள்ளன. அதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு ஆஸ்திரியாவைச் சேர்ந்த ‘பீட்டர் ஹேண்ட்கே’  என்பவரையும் தேர்வு செய்துள்ளது. மொழியில் கூர்மையுடன் கூடிய இவரது நாவல்கள் மற்றும் திரைக்கதைகள் மனித அனுபவத்தின் எல்லைகளையும், தனித்தன்மையை ஆராய்வதாக உள்ளன. அதற்காக இவர் இந்தாண்டு நோபல் பரிசுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை