பா.ஜ., செயல் தலைவர் நட்டாவுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிப்பு

தினமலர்  தினமலர்
பா.ஜ., செயல் தலைவர் நட்டாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிப்பு

புதுடில்லி,: பா.ஜ., செயல் தலைவர், ஜே.பி.நட்டாவுக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.பா.ஜ.,வின் செயல் தலைவராக, ஜே.பி.நட்டா, நான்கு மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். வரும் ஜனவரியில் அவர், கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், நட்டாவுக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது பற்றி, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:ஜே.பி.நட்டாவுக்கு உள்ள மிரட்டல்களை கருத்தில் கொண்டு, அவருக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 35 கமாண்டோ வீரர்கள், சுழற்சி அடிப்படையில், நட்டாவுக்கு, 24 மணி நேரமும் பாதுகாப்பு தருவர். ஒரு சமயத்தில், எட்டு அல்லது ஒன்பது கமாண்டோக்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.டில்லியில், நட்டா வீட்டின் முன், மத்திய ரீசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை