ரத்து செய்ய சொன்னவருக்கே நோபல் பரிசு

தினமலர்  தினமலர்
ரத்து செய்ய சொன்னவருக்கே நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்:'நோபல் பரிசை ரத்து செய்ய வேண்டும்' என கூறிய, ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கேவுக்கு, 2019ம் ஆண்டுக்கான, இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

போலந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஓல்கா தோகார்ஜக், 2018ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியல்இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

கடந்த, 2017ல் நோபல் பரிசுக்குரியோரை தேர்வு செய்யும் குழுவில் இருந்த, ஸ்வீடனைச் சேர்ந்த கவிஞர் காத்ரினா போர்ஸ்டன்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் பலாத்கார புகார் எழுந்தது. அது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தண்டனையும் கிடைத்தது. அதனால், 2018ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப் படவில்லை.தற்போது, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கான இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2018ம் ஆண்டுக்கான விருதுக்கு, போலந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஓல்கா தோகார்ஜக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, சர்வதேச புக்கர் பரிசையும் அவர் வென்றார்.15வது பெண்கடந்த, 1901ம் ஆண்டில் இருந்து இதுவரை, 116 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. அதில், விருதைப் பெறும், 15வது பெண் எழுத்தாளர் தோகார்ஜக்.இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ள, பீட்டர் ஹண்ட்கே, நோபல் பரிசை ரத்து செய்ய வேண்டும் என, முன்பு கூறியிருந்தார். தற்போது, அவரே நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இருவருக்கும் தலா, 6.5 கோடி ரூபாய் பணம், பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. வரும் டிசம்பர், 10ல் நடக்கும் நோபலின் நினைவு நாள் நிகழ்ச்சியில், இந்த விருது வழங்கப்பட உள்ளது.

மூலக்கதை