தென்னாப்பிரிக்கா குப்தா சகோதரர்களுக்கு அமெரிக்கா தடை

தினமலர்  தினமலர்
தென்னாப்பிரிக்கா குப்தா சகோதரர்களுக்கு அமெரிக்கா தடை

ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா,75 இவர்மீது ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் ஜேக்கப் ஜூமாவுக்கு நெருக்கமானவர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுமான அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா, அஜய் குப்தா என்ற குப்தா சகோதரர்கள் இல்லத்தில் சில தினங்களுக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இவர்கள் பற்றி நடந்த விசாரணையில்,,, ஜூமாவின் அரசு நிர்வாகத்தில் குப்தா சகோதரர்கள் தலையிட்டு சுரங்கம், விமான சேவை, எரிசக்தி, தொழில்நுட்பம், ஊடகம் என பல துறைகளை கைவசம் வைத்து காரியங்களை சாதித்து பெருமளவு ஊழல் செய்தது தெரியவந்தது. .இது தொடர்பாக குப்தா சகோதரர்களுக்கு அமெரிக்கா தடை விதித்ததுடன், இவர்கள் நிறுவனத்தினை கறுப்பு பட்டியலில் வைத்தது. இருப்பினும், குப்தா சகோதரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை