சவுதியில் ஆயுதப்படையில் பெண்கள் சேர்க்க அனுமதி

தினமலர்  தினமலர்
சவுதியில் ஆயுதப்படையில் பெண்கள் சேர்க்க அனுமதி

ரியாத்:சவுதி அரேபியாவில், பெண்களை ஆயுதப்படையில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேற்காசியாவில் உள்ள முஸ்லிம் நாடான, சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும் கட்டுப் பாடுகள் அமலில் உள்ளன. உடல் மற்றும் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணியும் சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் தற்போதைய இளவரசர் முகமது பின் சல்மான், இந்த விஷயங்களில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை அமல் படுத்தி வருகிறார்.

கார் ஓட்டுதல், விளையாட்டு போட்டிகள், சினிமா ஆகியவற்றை நேரடியாகப் பார்க்க அனுமதி என, பெண்களிடம் தாராளம் காட்டுகிறார். சவுதி அரேபிய ஆயுதப்படையில், பெண்கள் சேருவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை