சீன அதிபர் வரவேற்பு நிகழ்ச்சி: பா.ஜ.,வினர் பங்கேற்பு

தினமலர்  தினமலர்
சீன அதிபர் வரவேற்பு நிகழ்ச்சி: பா.ஜ.,வினர் பங்கேற்பு

சீன அதிபர் - பிரதமர் மோடி வருகையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பா.ஜ., தொண்டர்கள், சென்னை, சைதாப்பேட்டை முதல் மாமல்லபுரம் வரை, 32 இடங்களில், உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றம், அடையாறு மத்திய கைலாஷ், டைடல் பார்க் உட்பட, மாமல்லபுரம் வரை, மொத்தம், 32 இடங்களில், ஆயிரக்கணக்கில், பா.ஜ., தொண்டர்கள் வரிசையாக நின்று, கலை நிகழ்ச்சிகள் வாயிலாக, இரு நாட்டு தலைவர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.


கோவளம் கடற்கரையில் இருந்து, மாமல்லபுரம் வரை, கடலில், 300க்கும் மேற்பட்ட படகுகளின் அணிவகுப்பும் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பு மக்களும், சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். - நமது நிருபர் -


மூலக்கதை