ஜெர்மனியில் யூதர்களின் தேவாலயம் முன் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஜெர்மனியில் யூதர்களின் தேவாலயம் முன் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இருவர் உயிரிழப்பு

ஜெர்மனி: ஜெர்மனியில் யூதர்களின் தேவாலயம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவன், தேவாலயத்தில் வழிபாடு நடத்தியவர்களை சுட்டுக்கொல்லாமல், அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். யூதர்களின் புனித நாளான யோம்கிப்பூரை முன்னிட்டு, நேற்று கிறிஸ்தவர்கள் ஹாலே நகரில் உள்ள தேவாலயத்தில் திரண்டிருந்தனர். அப்போது, அங்கு பச்சை நிற உடையில் வந்த ஒருவன், பூட்டப்பட்டிருந்த ஆலய கதவை கையெறி குண்டு வீசி உடைக்க முயன்றுள்ளான். முயற்சி தோற்றதால் ஆத்திரத்தில் அவன் சாலையில் சென்ற பெண் மற்றும் அருகே கெபாப் உணவகத்தில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவனை கைது செய்து விசாரிக்கின்றனர். முன்னதாக 35 நிமிடம் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை தலையில் அணிந்திருந்த ஹெட் கேமராவில் பதிவு செய்த அந்த கொலையாளி, அதனை டிவிட்ச் என்ற கேமிங் தளம் மூலம் நேரடியாக சமூக வலைதளவாசிகளுக்கு ஒளிப்பரப்பியுள்ளான். அதில் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம் யூதர்கள் தான் என கூறியுள்ளான். மேலும் திட்டமிட்டபடி ஆலயத்தில் இருந்தவர்களை சுடாமல் அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றதற்கும் அதில் மன்னிப்பு கோரியிருந்தான். இந்த வீடியோ பதிவை அரை மணி நேரத்தில் சுமார் 2,200 முறை பார்த்திருந்த நிலையில், அந்த பதிவை சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனம் நீக்கியுள்ளது. 

மூலக்கதை