2018, 2019ம் ஆண்டுகள் இலக்கிய நோபல் பரிசு

தினமலர்  தினமலர்
2018, 2019ம் ஆண்டுகள் இலக்கிய நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: 2018 மற்றும் 2019 ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மருத்துவத்துறை, இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று (அக்., 09), 2018 மற்றும் 2019 ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு சென்ற ஆண்டில் கொடுக்கப்படாததால், இந்தாண்டு சேர்த்து கொடுக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் 2018ம் ஆண்டிற்கான நோபல் பரிசை போலந்து நாட்டை சேர்ந்த ஒல்கா டொகர்சுக், 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேன்ட்கே ஆகியோருக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

மூலக்கதை