காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் பிரதமர் மோடி மாபெரும் பணியை முடித்துள்ளார்: அமித்ஷா பெருமிதம்

தினகரன்  தினகரன்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் பிரதமர் மோடி மாபெரும் பணியை முடித்துள்ளார்: அமித்ஷா பெருமிதம்

லக்னோ: ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால், அதற்குப் பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  எச்சரித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும்  தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தற்போது ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து இந்த தேர்தலை  எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. அரசியல் கட்சி தலைவர்களும்  தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸை குற்றம் சாட்டினார்.  ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் பணியை செய்து  முடித்திருப்பதாகவும், இதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் தங்கள் நிலையை தெளிவுபடுத்த  வேண்டும் என்றும் அமித்ஷா வலியுறுத்தினார். பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு, ஒரு வீரர் உயிரிழந்தால் அதற்கு  பதிலாக எதிரிகள் 10 பேர் கொல்லப்படுவார்கள் என்பதை ஒட்டுமொத்த உலகமே இப்போது அறிந்திருப்பதாகவும் அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார். பாகிஸ்தானின் பாலக்கோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலை மறைமுகமாகக் குறிக்கும் இதைத் தெரிவித்தார். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்  கூட்டணியையும் சாடிய அமித்ஷா, முன்பு மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்தபோது இந்த கூட்டணி செய்த பணிகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

மூலக்கதை