இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் 2வது சதமடித்து அசத்தல்

தினகரன்  தினகரன்
இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் 2வது சதமடித்து அசத்தல்

புனே: இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து 138 ரன்கள் சேர்த்தனர்.அரை சதமடித்த புஜாரா 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்டிலும் மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடி அசத்தினார். அவர் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 108 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா கைப்பற்றினார்.

மூலக்கதை