பிடிஓ ஆபீசில் விஜிலென்ஸ் ‘ரெய்டு’ 5.10 லட்சம் சிக்கியது

தினகரன்  தினகரன்
பிடிஓ ஆபீசில் விஜிலென்ஸ் ‘ரெய்டு’ 5.10 லட்சம் சிக்கியது

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளிக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பணம் வசூல் செய்வதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதனடிப்படையில், நேற்று மாைல லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்தனர். பொறியாளர் அறையில் நுழைந்த அவர்கள் கதவுகளை அடைத்து, உள்ளே இருந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களை  அவரவர் இடத்திலேயே அமர வைத்தனர். அதை தொடர்ந்து, அலுவலர்களின் மேஜையில் சோதனையிட்டபோது, கட்டு கட்டாக பணம் சிக்கியது.  இதில், கணக்கில் வராத ₹5.10 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இது குறித்து,  அதிகாரிகள்,  அங்கிருந்த அலுவலர்களிடம்  4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மூலக்கதை