திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை: முருகன் தங்கிய வீட்டு உரிமையாளரிடம் விசாரணை

தினகரன்  தினகரன்
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை: முருகன் தங்கிய வீட்டு உரிமையாளரிடம் விசாரணை

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அடுத்த நரிக்குறவர் ரோடு, அம்மன் கோயில் அருகே உள்ள வீட்டில் கொள்ளையன் முருகன் 6 மாதம் தங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவெறும்பூர் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்து நகைக்கடையை கொள்ளையடிக்க திட்டம் வகுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை போலீஸ் அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர். திருச்சியில் ஷேக் அப்துல்காதர் என்பவர் வீட்டில் கொள்ளையன் முருகன் தங்கியிருந்ததாக போலீஸ் சந்தேகம் அடைந்துள்ளனர். ஷேக் அப்துல்காதரை திருச்சி போலீஸ் அழைத்து சென்று கொள்ளையன் முருகன் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மூலக்கதை