புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கோவையில் சொகுசு பங்களா

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கோவையில் சொகுசு பங்களா

தொண்டாமுத்தூர்: ஈஷா யோகா மையத்தில் தியான பயிற்சி மேற்கொள்ள வசதியாக புதுவை கவர்னர் கிரண்பேடி, கோவை அருகே ரூ. 85 லட்சத்திற்கு சொகுசு பங்களா வாங்கியுள்ளார். புதுவை கவர்னர் கிரண்பேடி கோவை தொண்டாமுத்தூர் அருகே மாதம்பட்டியில் செண்பகம் குடில் என்ற பகுதியில் ரூ. 85 லட்சத்திற்கு புதிய சொகுசு பங்களா வாங்கியுள்ளார்.

இதற்கான பத்திரப்பதிவு, தொண்டாமுத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த பங்களாவை கிரண்பேடி தனது பெயரிலும், தனது சகோதரியான அனுபேஸ்வாரியா பெயரிலும் சேர்த்து வாங்கியுள்ளார்.

இருவர் பெயரிலும் கூட்டாக நேற்று பத்திரப்பதிவு நடந்தது. மொத்தம் ஐந்தரை சென்ட் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த புதிய சொகுசு பங்களாவை, கேரளாவை சேர்ந்த ஒருவரிடமிருந்து கிரண்பேடி விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

செண்பகம் குடில் பகுதியில் இதுபோல் 100 சொகுசு வீடுகள் தனித்தனியாக அமைந்துள்ளன.

பத்திரப்பதிவு முடிந்தவுடன் கிரண்பேடி, கோவை பூண்டி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றார். தியான பயிற்சிக்காக அவர் அவ்வப்போது கோவை ஈஷா யோகா மையம் வந்து, செல்லும் நிலையில், இந்த பகுதியிலேேய பங்களா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவர்னர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின், இங்கேயே குடியேற திட்டமிட்டுள்ளதாகவும், ஈஷா யோகா மையத்தில் தியான பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

.

மூலக்கதை