பொதுமக்கள் தங்களை எளிதில் அணுக வேண்டும்: பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தினகரன்  தினகரன்
பொதுமக்கள் தங்களை எளிதில் அணுக வேண்டும்: பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

டெல்லி: போலீசார் பொதுமக்களின் நண்பர்களாக மாற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை  வழங்கியுள்ளார். 2018-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்து பயிற்சி எடுத்துவரும் 126 இளம் அதிகாரிகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர்.  அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாடிய பிரதமர் மோடி, குற்றங்களை தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதிலும், நவீன காவல்துறையை  உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை முன்னிலை படுத்துவதிலும் போலீசார் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், போலீசார் தங்கள் பணியை சேவை மற்றும் அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும் என்றும் மக்களுக்கும், போலீசாருக்கும் உள்ள தொடர்பின்  முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். பொதுமக்கள் தங்களை எளிதில் அணுகும் நிலையை ஏற்படுத்துவதுடன்,  அவர்களுக்கு நண்பர்களாக மாற வேண்டும் என்றும் இளம் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை வாங்கினார். இந்த சந்திப்பின்போது, நாட்டின் பின்தங்கிய  மாவட்டங்களை மேம்படுத்தும் பணியில் போலீசாரின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை