காங்கிரஸ் பேரழிவை சந்திக்கும்: ஜோதிராதித்ய சிந்தியா கருத்தால் சலசலப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ் பேரழிவை சந்திக்கும்: ஜோதிராதித்ய சிந்தியா கருத்தால் சலசலப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி மிக மோசமான நிலையில் உள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் சொன்ன 2 நாட்களில், ஜோதிராதித்ய சிந்தியாவும் அதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் கட்சி நெருக்கடியில் உள்ளதாகவும், தள்ளாட்டமான சூழலை சந்தித்து வருவதாகவும் சல்மான் குர்ஷித் கூறி இருந்தார்.

கட்சியின் தலைமை பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, மற்றவர்களின் கருத்துக்கள் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

கட்சியின் நிலைமையை ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டும். அதற்கு சில மணி நேரம் போதும்.

உடனடியாக கட்சியின் நிலைமைைய சரி செய்து காப்பாற்றாவிட்டால் கட்சி பேரழிவை சந்திக்கும் என்றார்.

ம. பி. , மாநில காங். , பதவி தொடர்பாக கடந்த 2 மாதங்களாக கட்சி தலைமை மீது ஜோதிராத்ய சிந்தியா அதிருப்தியில் உள்ளதாகவும், அவர் காங். ,ல் இருந்து விலகி பா. ஜ. ,வில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் கட்சியின் தற்போதைய நிலை குறித்து அவர் பேசி உள்ள கருத்து கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மோடி அரசு நீக்கியதற்கும் ஆதரவாக ஜோதிராதித்ய சிந்தியா கருத்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை