கோஹ்லி ‘50’ * கேப்டனாக புதிய மைல்கல் | அக்டோபர் 10, 2019

தினமலர்  தினமலர்
கோஹ்லி ‘50’ * கேப்டனாக புதிய மைல்கல் | அக்டோபர் 10, 2019

புனே: இந்திய அணி கேப்டனாக களமிறங்கிய தனது 50வது ‘டாஸ்’ வென்ற கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார். 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் புனேயில் துவங்கியது. இந்திய அணி கேப்டனாக தனது 50வது டெஸ்டில் களமிறங்கிய கோஹ்லி, ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார். 

இரண்டாவது இடம்

இதையடுத்து இந்திய அணிக்காக அதிக டெஸ்டில் கேப்டனாக களமிறங்கியவர்களில் கங்குலியை (49 டெஸ்ட், 21 வெற்றி) முந்தி இரண்டாவது இடம் பிடித்தார் கோஹ்லி. இவர், முந்தைய 49 டெஸ்டில் 29ல் வெற்றி பெற்றார்.

முதலிடத்தில் முன்னாள் கேப்டன் தோனி (60 டெஸ்ட், 27 வெற்றி) உள்ளார். 4, 5 மற்றும் 6வது இடங்களில் கவாஸ்கர் (47ல் 9 வெற்றி), முகமது அசார் (47ல் 14), மன்சூர் அலிகான் பட்டோடி (40ல் 9) உள்ளனர். 

* உலக டெஸ்ட் அரங்கில் முதலில் களமிறங்கிய 49 டெஸ்டில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (36 வெற்றி), பாண்டிங்கிற்கு (34 வெற்றி) அடுத்து மூன்றாவது இடத்தில் கோஹ்லி (29 வெற்றி) உள்ளார். 

மூலக்கதை