மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13, 15-ம் தேதிகளில் ராகுல் காந்தி பிரச்சாரம்..!

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13, 15ம் தேதிகளில் ராகுல் காந்தி பிரச்சாரம்..!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13 மற்றும் 15-ம் தேதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மேலும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்கள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 125 தொகுதிகளில் காங்கிரசும், 125 தொகுதிகளில் தேசியவாத காங்கிரசும் போட்டியிடுகின்றன. எஞ்சிய தொகுதிகளில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 13 மற்றும் 15-ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 13-ம் தேதி மும்பையில் பேரணி ஒன்றையும் ராகுல் காந்தி நடத்த உள்ளார் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

மூலக்கதை