அவதூறு வழக்கு :சூரத் கோர்ட்டில் இன்று ராகுல் ஆஜர்

தினமலர்  தினமலர்
அவதூறு வழக்கு :சூரத் கோர்ட்டில் இன்று ராகுல் ஆஜர்

சூரத் : பிரதமர் மோடி குறித்து பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று (அக்.10) சூரத் கோர்ட்டில் ஆஜராகிறார் ராகுல்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, காங்., முன்னாள் தலைவர், ராகுல் பேசியதாவது: நாட்டின் காவலாளி என தன்னை கூறி வருகிறார் மோடி, ஆனால் 'அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று எப்படி உள்ளது' என்றார். ராகுல் பேச்சு குறித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது. ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று (அக்.10) நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..

மற்றொரு வழக்கு


ராகுல் மீது குஜராத் ஆமதாபாத் கோர்ட்டில் தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கு விசாரணைக்காக, ராகுல் கோர்ட்டில் ஆஜராகிறார். இத்தகவல்களை மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்தார்.


மூலக்கதை