ஆபரேஷன் ' அமைதி வசந்தம் ' என்ற பெயரில் குர்துக்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதல் பற்றி கவலை தெரிவித்து வரும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

தினகரன்  தினகரன்
ஆபரேஷன்  அமைதி வசந்தம்  என்ற பெயரில் குர்துக்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதல் பற்றி கவலை தெரிவித்து வரும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

நியூயார்க்: சிரியாவில் குர்து படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து  ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டம் நடந்தது. மூடிய அறைக்குள் நடந்த இந்த கூட்டத்தில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும் தென்னாப்பிரிக்க தூதரும் ஜெர்ரி மத்தியூ பேசும்போது துருக்கி அதிபர் எர்டோகன் அதிகபட்ச கட்டுப்பாடுடனும் பொதுமக்களை பாதுகாக்கும் எண்ணத்துடனும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆபரேஷன் \' அமைதி வசந்தம் \'  என்ற பெயரில் குர்துக்கள் மீது துருக்கி நடத்தி வரும் தாக்குதல் பற்றி கவலை தெரிவித்து வரும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக சிரியாவில் ஐ.எஸ். படையினருக்கு எதிராக போராடி வந்த குர்து படையினர், துருக்கியிலும் தாக்குதலின் ஈடுபட்டதாக கூறி துருக்கி தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை