நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவின் கிழக்கு பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

தினகரன்  தினகரன்
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவின் கிழக்கு பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

நியூசிலாந்து: நியூசிலாந்து நாட்டில் உள்ள வடக்கு தீவின் கிழக்கு பகுதியில் நேற்று இரவு 8.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இருந்து பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது வாபஸ் பெறப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது. இதையடுத்து அந்த இடத்தை சுற்றியுள்ள மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரிங் ஆப் பயர் பகுதியில் அமைந்திருக்கும் நியூசிலாந்தில் ஆண்டுக்கு 14 ஆயிரம் முறை நில அதிர்வு ஏற்படும் என கூறப்படுகிறது.

மூலக்கதை