படைப்புழுவை கட்டுப்படுத்த ரூ47 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

தினகரன்  தினகரன்
படைப்புழுவை கட்டுப்படுத்த ரூ47 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு பூச்சிமருந்து தெளிப்பதற்காக ரூ47 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. படைப்புழுவால் மக்காச் சோளம், இனிப்பு மக்காச் சோளம், சோளம் மற்றும் புல்வகை களைகளில் தாக்குதல் அதிகம் காணப்படும். இவற்றை தவிர, நெல், கரும்பு, பருத்தி, சிறு தானியங்கள், நிலக்கடலை, புகையிலை மற்றும் கோதுமையிலும் இதன் தாக்குதல் பரவலாகக் காணப்படும். காய்கறிப் பயிர்களை அதிகம் விரும்பாவிட்டாலும், அதிலும் இப் புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், அதனை கட்டுப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை