சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு எதிராக துருக்கி நடத்தும் ராணுவத் தாக்குதலைக் கருத்தில் கொண்டு வடக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக குர்து படைகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது என்று துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்து வந்தார். மேலும் எல்லைப் பகுதியில் தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளை அழிப்பதற்காக துருக்கி ராணுவ நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்றும் இது தொடர்பான பணிக்குத் தயாராகி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. எனவே ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் துருக்கியில் இடம்பெயர்ந்தனர்.

மூலக்கதை