மனைவியை தாக்கினாரா ஸ்டோக்ஸ் | அக்டோபர் 09, 2019

தினமலர்  தினமலர்
மனைவியை தாக்கினாரா ஸ்டோக்ஸ் | அக்டோபர் 09, 2019

லண்டன்: ‘‘என் மீது ஸ்டோக்ஸ் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தி தவறானது,’’ என, அவரது மனைவி கிளாரா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ‘ஆல் ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ், 28. சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில், அணிக்கு கோப்பை வென்று தந்தார். உள்ளூர் போட்டிகளிலும் ஜொலித்த இவரை கவரவிக்கும்விதமாக, தொழில்ரீதியிலான கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் சிறந்த வீரர் என்ற விருது லண்டனில் வழங்கப்பட்டது. இதில் தனது மனைவி கிளாராவுடன் பங்கேற்றார். இதற்கிடையே, நிகழ்ச்சிக்கு இடையே கிளாராவின் கழுத்தை ஸ்டோக்ஸ் நெரிப்பது போன்ற புகைப்படத்துடன், இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த புகாருக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிளாரா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ சிலரது முட்டாள்தனமான சிந்தனைகளை நம்பவே முடியவில்லை. எனது கழுத்தில் ஸ்டோக்சின் கை இருந்ததற்கு அன்புதான் காரணம். இருவருக்கும் இடையே உள்ள அன்பை வெளிப்படுத்துவதாக இது அமைந்தது. இதை விறுவிறுப்பான கதையாக மாற்ற சிலர் முயற்சி செய்தனர்,’ என, தெரிவித்துள்ளார்.

மூலக்கதை