நடை பயிலும் பாண்ட்யா | அக்டோபர் 09, 2019

தினமலர்  தினமலர்
நடை பயிலும் பாண்ட்யா | அக்டோபர் 09, 2019

 புதுடில்லி: ஆப்பரேஷன் செய்த பாண்ட்யா, சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்து வருகிறார். 

இந்திய கிரிக்கெட் ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் இவரது முதுகுப்பகுதி காயம் அதிகரித்தது. இதனால் லண்டன் சென்ற இவருக்கு கடந்த  4ம் தேதி ஆப்பரேஷன் நடந்தது.

தற்போது இதில் இருந்து மீண்டு வரும் இவர் மருத்துவமனையில் சிறு குழந்தை போல நடை பயின்ற வீடியோவை வெளியிட்டார். இதில்,‘ சிறு குழந்தை முதன் முதலாக நடக்கத் துவங்கியது போல உள்ளது. ஆனால் காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதி பெறுவதற்கான துவக்கம் இது. நான் மீண்டு வர ஆதரவும், வாழ்த்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி,’ என தெரிவித்துள்ளார். 

மூலக்கதை