தேசம், மதத்தின் பெயரால் பாகுபாடு முஸ்லிம் ஊழியர்களுக்கு 1.95 கோடி இழப்பீடு: அமெரிக்காவில் உத்தரவு

தினகரன்  தினகரன்
தேசம், மதத்தின் பெயரால் பாகுபாடு முஸ்லிம் ஊழியர்களுக்கு 1.95 கோடி இழப்பீடு: அமெரிக்காவில் உத்தரவு

நியூயார்க்: அமெரிக்காவில் எண்ணெய் வளத்துறை தொடர்பான உற்பத்தி மற்றும் சேவையை  வழங்குவதில் கல்லீபர்டன் நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஹூஸ்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இந்நிறுவனத்தின் எண்ணெய் வயலில் பணி புரியும் இந்தியாவை சேர்ந்த மிர் அலி, உதவி ஆபரேட்டராக இருக்கும் சிரியாவை சேர்ந்த ஹசன் சோனுபர் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு முதல், அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் தேசத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் இழிவுபடுத்தப்பட்டனர்.  இதையடுத்து அவர்கள் இருவரும் அமெரிக்க சம வேலைவாய்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, டல்லாஸ் பிரிவு அமெரிக்க சம வேலைவாய்ப்பு ஆணையம் டெக்சஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில், `இழி சொல்லுக்கு ஆளான தொழிலாளர்கள் இருவருக்கும் 1.95 கோடி நிதி இழப்பீடு வழங்க வேண்டும். மத, தேச பாகுபாடுகள் கூடாது என்பதை மனிதவளத்துறை ஊழியர்களிடம் நிர்ப்பந்தி க்க வேண்டும்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மூலக்கதை