மேலும் பல பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க முடிவு

தினகரன்  தினகரன்
மேலும் பல பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க முடிவு

புதுடெல்லி: பொருட்கள் இறக்குதியை தடுக்க, எலக்ட்ரானிக், பொம்மை உட்பட நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளாகவே மோசமாக உள்ளது. பொருளாதார மந்த நிலையால் தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து மலிவு விலையில் பொருட்கள் இறக்குமதி செய்வதால் தொழில்துறைகளுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு சில பொருட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரியை விதித்துள்ளது. இந்நிலையில் மேலும் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு,  இறக்குமதியை தடுக்க வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள், பொம்மை, போர்வைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் இதில் அடங்கும். இவற்றை வர்த்தக அமைச்சகம் பட்டியலிட்டு வருகிறது. ஏற்கெனவே இறக்குமதி வரி அதிகம் விதிக்கப்பட்டுள்ள சில பொருட்கள், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்த நாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டும், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் ேநாக்கிலும் வரி விதிப்பு முடிவு செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை